About
இன்று 74 வது சுதந்திர தினம். 14 வயதைக் கடக்கும் எங்களின் அனுபவமும் சிந்தனையும் கனவுமாய் வெளிவந்துள்ளது நிலத்தி. நாங்கள் எங்கள் உணர்வுகளை, செயல்பாடுகளை, தேவைகளை...உரையாடினோம்! வாசித்தோம்! வரைந்தோம்! எழுதினோம்! இன்று அவற்றிற்கு புது வடிவமளிக்கப்பட்டுள்ளது. கொரானாக் கால முழு அடைப்பில் எங்கள் கூடுகைகளுக்கு உதவின இணையங்கள்.
“பெண்ணும் ஆணும் நட்பாய்” என்ற எங்களின் பதிவு முதல் இதழாய் உரு பெற்றுள்ளது. நாங்கள் வளர்ந்த குழந்தையா? முதிர்ந்த மனிதரா? என்ற குழப்பம் தின வாழ்க்கையின் முக்கியக் கேள்வியாய் முன் நிற்பதைப் பற்றி யோசித்தோம். எண்ணற்ற எங்களின் கனவுகளுக்கான துவக்கப்புள்ளி நிலத்தி.
நாங்கள் பல ஊர்களில் வசிக்கிறோம். வேறுபட்ட வாழ்க்கை முறை, பின்னணி எங்களுடையது. ஆனால் ஒத்த சிந்தனையுடையவர்களாக இருக்கிறோம். வியக்கத் தகுந்த சுதந்திர உணர்வும், சமத்துவத்திற்கான உந்துதலும், சமூகத்தைப் பற்றிய கனவும் எங்களுக்குள் இருப்பதை அடையாளங்கண்டுள்ளோம்.
எங்களின் பயணம்! கனவுகள்! கொரானாக்காலம்! வாசித்த புத்தகங்கள்! காதல்! என அடுத்தடுத்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்.
உங்கள் கரங்கள் எங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல உதவட்டும்.
Today is the 74th Independence Day. We youth with our 14 years of experiences, thoughts and dreams have come together to form this magazine called Nilathi. We shared our emotions, encounters and needs… Discussed! Wrote! Read! Drew! Today we give a new form to it. Such a massive online platform helped us to connect during this COVID-19 lockdown.
Our first edition is called “Friends with the opposite gender”. Are we a grown child? Matured Adult? We thought about the dilemma that stands in front us in our daily lives. The starting point for our innumerable dreams is Nilathi.
Though we live in different places, lifestyles and come from different backgrounds, we found that we still have similar thoughts of sense Freedom, equality and dreams for the society.
Our journey! Dreams! COVID times! Book reading! Love! All these are topics we plan to issue in the near future.
With your help and support us, we can move forward.