என்ஆண் நண்பர்கள்
- Nila
- Mar 8, 2021
- 2 min read
எனக்கு சிறிய வயதிலிருந்து பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்கள் தான் அதிகம். சில சமயம் நாங்கள் ஒரு குழுவாக இருப்போம். . சில சமயம் ஒரு பையன் மட்டும் இருப்பான். சில சமயம் நான் மட்டும் தான் பெண்ணாக இருப்பேன். என்றைக்குமே என் வீட்டில் ஒரு பையனிடம் பேசுவதற்கு தடுத்தே இல்லை. நான் இதில் மூன்று பசங்களுடனான என் நட்பின் அனுபவத்தை எழுதியுள்ளேன்.
முதலில், இந்த corona காலத்தில் தினமும்

சைக்கிள் ஒட்டுவேன். தனியாக போய்க்கொண்டிருந்ததால் போர் அடித்தது. எனவே நான் பக்கத்து காலனியில் உள்ள சைக்கிள் ஓட்டிகளை நண்பர்களாக ஆக்கிக்கொண்டேன். நாங்கள் மொத்தம் 4 பேர், நான் மட்டும் தான் அங்கு பெண். 2 வாரமாக
தான் பேசிவருகிறோம். அவர்களும் என்னை யாரோ என்று பார்க்காமல் அவர்களுள் ஒருவராக என்னை பார்க்கின்றனர். நாங்கள் 4 பேரும் தினமும் ஒன்றாக சைக்கிள் ஒட்டுவோம், கதை பேசுவோம், பாட்டு கேட்போம்.
அடுத்ததாக எட்டாம் வகுப்பில் நடந்த ஒரு அனுபவம். நான், இசை, ராமு மற்றும் சோமு ஒரு குழுவாக இருந்தோம். சாலி என்பவளால் ராமுவுக்கு சோமுவுக்குமிடையே பிரச்சனை வந்தது. இருவரும் பிரிந்தனர். எனக்கும் இசைக்கும் அவர்கள் இருவருமே ரொம்ப நல்ல நண்பர்கள் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் போனது. சில நேரம் ராமுவுடனும், சில நேரம் சோமு விடமும் நட்பாக இருந்தோம். இருவருமே அவர்களுக்குள் என்ன நடந்தது என்று என்னிடமும் இசையிடமும் சொல்லவே இல்லை. ராமுவிடம் என்ன ஆயிற்று என்றுக் கேட்டால் “ அவன் கிடக்குறான் லூசு” என்பான். சோமு விடம் கேட்டாலும் அதே பதில் தான் வரும். உயிர்த் தோழனாக இருந்த இருவரும் திடீர் என்று பிரிந்தனர் என்பதால் எல்லோருக்கும்
கேள்விக்குறியாக இருந்தது. எங்கள் வகுப்பு பசங்கள் எல்லோரும் வந்து என்னிடமும், இசையிடமும் கேட்டனர். எங்களுக்கு நாங்களாக கண்டுபிடித்த ஒரு பதிலை எப்படி எல்லோருக்கும் சொல்வது என்று யாரிடமும் சொல்லவில்லை. எங்களுக்கு தெரியாது என்று சொன்னோம். போகப் போக எங்கள் ஆசிரியர்களும் கண்டுப்பிடித்து, எங்களிடம் கேட்டனர்.
ஆசிரியர்கள் ராமுவிடமும் சோமுவிடமும் பேசினர்.
அவர்கள் இருவரும் ஆசிரியர்கள் முன்பு மட்டும் பேசிக்கொள்வது போல் நடித்தனர். நானும் இசையும் இருவரிடமும் தனியாகப் போய்
இருவரையும் பேசச் சொல்வோம். இருவருமே “அவன் வந்து சாரி சொன்னா தான் நான் பேசுவேன்” என்றனர். எனக்கும் இசைக்கும் கோவம் கோவமாக வரும். கடைசியில் அவர்கள் இருவரும் ஒன்பதாம் வகுப்பு முடிவில் தான் பேசினர். எங்களுக்கு எப்படி பேச ஆரம்பித்தனர் என்று தெரியவில்லை. ஆனால் அன்று வீட்டுக்குப் போகும்போது இருவரும் எங்களிடம் வந்து “ hey girl, reunion கொண்டாட காசு தா” என்றனர். எங்கள் இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. “போங்கடா உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைப்பதுக்கே போதும் போதும் என்று இருந்தது, இதுல reunion வேறயா?” என்று சொல்லிவிட்டு போய்விட்டோம்.
எட்டாம் வகுப்பு நடுப்பகுதியில் படித்துக் கொண்டிருக்கும்போது வேறு ஒரு பள்ளி வாகனத்தில் சென்றேன். அப்பொழுது தான் யாஷுவுடன் நட்புக்கொண்டேன். நாங்கள் இருவரும் சென்னைக்கு நிறைய

போட்டிகளுக்கு ஒன்றாக சென்றிருக்கிரோம். ஆனாலும் அப்போதுதான் பேச ஆர்ம்பித்தோம். எங்கள் பள்ளியின் விளையாட்டு தினத்தன்று நாங்கள் இருவரும் தான் Olympic torchஐ தூக்கினோம். அப்பொழுதுதான் நிறைய பேச ஆர்ம்பித்தோம். நான் table tennis player அவன் riffle shooter, அதனால எங்கள் இருவருக்கும் நிறைய ஒத்துப்போனது. பேருந்தில் இருவரும் ஒன்றாக தான் உட்காருவோம். கேன்டீனுக்கு நான், இசை, யாஷு மூவரும் ஒன்றாகச் செல்வோம். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அவன் எட்டாம் வகுப்புப் படித்தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒரே வயதினர். நானும் அவனும் நிறைய camps plan பன்னி ஒன்றாக சேர்ந்து பங்கேற்போம். என்னையும் அவனையும் சேர்த்து வைத்து எல்லோரும பேசுவார்கள். நாங்கள் அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஏன் என்றால் எங்களுக்கு நாங்கள் யார் என்று தெரியும். சில நாள் எனக்கு match இருக்கும் சில நாள் அவனுக்கு match இருக்கும். தினமும் அவனை பார்க்க முடியாது. ரொம்ப நாள் கழித்து பார்த்தால் full energy யோட hi da னு சொல்லுவேன். அவன் எங்கயாவது வெளியில் போய்விட்டு வந்தால் அதைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவான். நான் match முடிந்
து வரும்பொழுது அவனுக்குக் கதைகள்
இது போல் நிறைய பசங்களுடன் நடந்த அனுபவங்கள் இருக்கிறது. எனக்குப் பசங்களுடன் பேசுவது என்றைக்குமே கூச்சமாக இருந்தது இல்லை. வெட்கப்பட்டதும் இல்லை. நானாக முதலில் போய்ப் பேசுவேன். இயல்பாக இருப்பேன். என் ஆசிரியர்கள் அல்லது மற்றவர்கள் அது பற்றி தவறாகப் பேசினால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்க எனக்கு அம்மா, பெரியம்மா, அத்தை என இருக்கிறார்கள்.
Comentarios